நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மாணவி முதலிடம்!



(க.கிஷாந்தன்)

வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தின் தமிழ் மாணவி, கலை பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஜெபமாலை செலஸ்டினா என்ற மாணவியே  3A என்ற பெறுபேற்றைப் பெற்று  நுவரெலியா  மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார். மேலும் அகில  இலங்கை ரீதியில் 114ம் இடத்தினை பெற்றுள்ளார்.

இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும்  ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

ஜெபமாலை,  சரோஜா தேவி  தம்பதியரின் புதல்வியான இவரை, அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர்  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.