இலங்கையிலுள்ள பாடசாலைகளில் மாணவருக்கு வழங்கப்படும் நாளாந்த இலவச சத்துணவுக்கான பெறுமதி 28ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
ஏலவே ஒரு நாளைக்கு ஒரு மாணவனுக்கு 25 ருபா வீதம் வழங்கப்பட்டுவந்தது. குறிப்பிட்ட உணவுகள் நாளாந்தம் காலையில் தரம் 1முதல் தரம் 5வரையான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. 100க்குக் குறைந்த மாணவர்கள் ஒருபாடசாலையில் மொத்ததொகையாகவிருப்பின் அனைவருக்கும் வழங்கப்படும்.
இவ்வுணவை அப்பாடசாலை சமுகத்தைச்சேர்ந்த சமுர்த்திபெறும் பயனாளியொருவர் தயாரித்து வழங்கவேண்டும். 100மாணவர்களுக்கு ஒரு உணவுவழங்குனர் வீதம் மாணவர் தொகைக்கேற்ப வழங்குனர்கள் ஒப்பந்தம் மூலம் பதியப்பட்டு வழங்கப்படவேண்டும்.
இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இவ்வதிகரிப்பு நடைமுறைக்குவருகின்றதாயினும் சில மாகாணங்கள் இவ்வறிவித்தலை இம்மாதமே சுற்றுநிருபம் மூலம் அறிவித்துள்ளதனால் அந்ததிகதி முதலே இது அமுலுக்குவருமென அறிவிக்கப்பட்டுள்ளது.