தீர்ப்பு எப்படியிருக்க வாய்ப்பு?



மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலர் சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று வெளியாகவுள்ள தீர்ப்பு எப்படியெல்லாம் இருக்க வாய்ப்பு உள்ளது, அதனால் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
இந்திய உச்ச நீதி மன்றத்தில் பொதுவாக, தீர்ப்புகள் எழுதப்படும்போது, வழக்கமாக, ஒருமித்த கருத்து இருந்தால், ஒரு நீதிபதி தீர்ப்பு எழுதுவார், இன்னொரு நீதிபதி அதை ஏற்றுக் கொள்வார்.
ஆனால், வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளிடையே, கருத்து வேற்றுமை இருந்தால், தனித்தனித் தீர்ப்புகள் எழுதப்படும்.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இந்த இரண்டில் எதுவும் நடக்கலாம்.
இரண்டு நீதிபதிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிப்பது என்று ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்து, தண்டனைக் காலம் எவ்வளவு என்பதில் முரண்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.