ஒக்கம்பிட்டியவில் குழந்தைக்கு மதுபானம் ஊட்டியவர் கைது



மொனராகலை – ஒக்கம்பிட்டிய, தம்பேயாய பகுதியில் ஒன்றரை வயது குழந்தைக்கு மதுபானத்தை ஊட்டியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையின் அத்தை வழி உறவினரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தற்போது குழந்தை மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
கைதாகியுள்ள சந்தேகநபரை இன்று வெல்லவாய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.