அக்கரைப்பற்றில் ”சேகுவின்” முழு நிலவில் கலை இரவு




மு.கா ஸ்தாபகத் தவிசாளர் முன்னாள் அமைச்சர் வேதாந்தி சட்டத்தரணி ஷேகு இஸ்ஸதீனின்  முழு நிலவில் கலை இரவு நிகழ்வு வெள்ளி மாலை அக்கரைப்பற்று கடற்கரையில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் கௌரவ.M.S.S.அமீர் அலி அவர்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தர்.

இந்நிகழ்வில் அரசியல் , கலாச்சாரம், பாடல்கள், பிரகடனங்கள் என பல சுவாரஸ்யங்களுடன் முக்கிய உரைகளும் நடைபெற்றன.

2000ம்; ஆண்டு வேதாந்தியினால் முழு நிலவில் கலையிரவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதன் பின்னர் சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு இந்நிகழ்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.