(தகவல் நஹிஜா- உதவிப் பிரதேச செயலர்)
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது, தனது பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தன்னார்வ அடிப்படையில் உதவ விரும்புகின்ற பட்டதாரி மாணவர்கள், அண்மையில் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்த பட்டதாரிகள் அல்லது அதற்கு நிகரான தகைமைகளைக் கொண்டுள்ளவர்களிடமிருந்து உள்ளிருப்புப் பயிற்சிக்கான (Internship Training) விண்ணப்பங்களைக் கோருகின்றது.
சட்டம், அரசியல் விஞ்ஞானம், சமூக விஞ்ஞானத்தின் ஏனைய பரப்புக்கள், மானுடவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளுள் ஒன்றைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்திலோ அல்லது அதன் பிராந்தியக் காரியாலயங்களிலோ மேற்படி 3 மாத கால உள்ளிருப்புப் பயிற்சியைப் பெற விரும்புவோர் 2017.03.01ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ பின்வரும் முகவரியினூடாக விண்ணப்பிக்க முடியும்,
செயலாளர்,
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,
இல.165, கின்ஸி வீதி,
கொழும்பு 08
sechrc@sltnet.lk என்னும் மின்னஞ்சல் முகவரியூடாகவும் உங்கள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்.
(இத்தகவலை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். தேவையுடையவர்கள் பயனடையட்டும்.)
- V4U Volunteers Hub
0775 285 999

