நெய்னாகாட்டில் மாடு திருடியோர் கைது



-எம்.எஸ்.எம்.ஹனீபா-
 சம்மாந்துறை, நெய்னாகாட்டுப் பிரதேசத்தில் மாடு ஒன்றைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேரை இன்று (6) காலை கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர். திருடப்பட்ட மாட்டைக் கல்முனையிலுள்ள மாடு அறுக்கும் இடத்துக்குக் கொண்டு சென்றபோதே, இச்சந்தேக நபர்கள் மாடு திருடியமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.