வரகாபொல பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பான சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
வரகாபொல, என்தாவல பிரதேசத்தில் இருந்து கை கால்கள், கண்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் ஒன்று நேற்று (10) கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த 31 வயது மதிக்கத்தக்க இளைஞர் கடுகன்னாவை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
அவர் நிட்டம்புவ பிரதேசத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் எனவும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தனது இருப்பிடத்திலிருந்து கடுகண்ணாவைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து பஸ்யாலை பிரதேசத்தில் அடையாளம் தெரியாத குழுவொன்றினால் அவர் கடத்தப்பட்டதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
தனிப்பட்ட காரணம் ஒன்றிற்காக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
சடலம் தற்போது கேகாலை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மரண விசாரணைகள் கேகாலை சட்ட மருத்துவ அதிகாரியினால் இன்று நடத்தப்படு்ம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.