ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொட்டகலையில்



(க.கிஷாந்தன்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் விசேட அழைப்பை ஏற்று நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 09.02.2017 அன்று கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்தார். காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்றார்.

தலவாக்கலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஜனாதிபதி கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடதக்கது.

மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன் ஏற்பாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயிகளுக்கும் கால்நடை பண்ணையாளர்களுக்கும் உபகரணங்கள் வழங்கும் வைபவத்தையொட்டி இ.தொ.காவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி கலந்து கொண்டு வைபவங்களில் பங்கேற்றினார்.

இவ்வைபவம் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதியுடன், அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, பைஸர் முஸ்தப்பா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம் உள்ளிட்ட மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.