மட்டக்களப்பு - ஓட்டமாவடி - நாவலடி பிரதேசத்தில் திங்கள்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தொன்றை அடுத்து, அங்கு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம் (ஜெயம்) சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனையில் இருந்து வாகரை பிரதேசத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சென்ற வேனும் நாவலடி பிரதேசத்தில் இருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதனையடுத்து, அப் பகுதியில் உள்ள பொது மக்கள் சிலரால் வேனை செலுத்தி வந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தாக்கப்பட்டுள்ளார்.
இதனால் காயமடைந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.