வெல்லமடம பீடத்துக்கு பூட்டு



றுஹுனு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

பிரதேசவாசிகளுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக றுஹுனு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகத்தில் உள்ள 05 பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.