இலங்கை வானொலியின் சிரேஸ்ட அறிவிப்பாளர் காலமானார்.



சிரேஷ்ட ஊடகவியலாளர் பேராசிரியர் ஆரியதாஸ பீரிஸ் தனது 91 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
பேராசிரியர் ஆரியதாச பீரிஸ் ஊடகவியலாளராகவும் வானொலி அறிவிப்பாளராகவும் கடமையாற்றி வந்தவர்.
இவர், பகுதிநேர அறிவிப்பாளராக 1951 ஆம் ஆண்டு வானொலியில் இணைந்த பேராசிரியர் ஆரியதாஸ பீரிஸ், இசை நிகழ்ச்சிகளை நெறியாழ்கை செய்வதில் சிறந்த திறமையை வெளிப்படுத்தியிருந்தவர்.
இதேவேளை, பிரபல பாடகி சரித்தா பிரியதர்சினியின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.