போலி விமானச் சீட்டு அலுவலகம் மருதானையில் சுற்றிவளைப்பு



சட்டவிரோதமான முறையில் விமான பயணச்சீட்டுகள் வழங்கி வந்த அலுவலகமொன்று நேற்று சுற்றிவளைக்கப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்த பெண்ணொருவரிடம் போலி கடவுச்சீட்டு மற்றும் போலி ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் போதே மேற்படி சட்டவிரோத முகவர் நிலையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி கடவுச் சீட்டைவைத்திருந்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மருதானையில் இயங்கிவந்த மேற்படி போலி முகவர் நிலையத்திலிருந்து 30 போலி கடவுச்சீட்டுகளும் பல போலி ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன.