பல்கலை மாணவர்களின் வதிவிடப் பயிற்ச்சி



(அஷ்ரப் ஏ சமத்)

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ சம்மேளனத்தினால் 3வது முறையாக  நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் இளம்  40 மாணவா்களைத் தெரிபு செய்து 3 நாற்கள் வதிவிட பயிற்சிகள்  பல்வேறு தலைப்புக்களில் எதிா்காலத்தின் தலைவா்கள் என்ற தலைப்பியில் பயிற்சி வகுப்புக்களை நடாத்தி வருகின்றது.  இந் நிகழ்வு கடந்த 09ஆம் திகதி காலை 08.30 மணிக்கு கொழும்பு -7 ல் உள்ள கொக்டா் கொப்பேக்கடுவ விவசாய பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.. 

ஆரம்ப விழாவில் பிரதம அதிதியாக மேன்முறையீட்டு  நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம் நவாசும், கௌரவ அதிதியாக அமேரிக்க துாதரகத்தின் தகவல் வெளியீட்டு பணிப்பாளா்  ஜேம்ஸ் ருசோ கலந்து கொண்டு பயிற்சியை ஆரம்பித்து வைத்தனா்.  அகில  இலங்கை.  வை.எம். எம். ஏ வின் தேசியத் தலைவா்  எம். தௌபீக் சுபைா்,  இப் பயிற்சியின் ஏற்பாட்டுத்  தலைவா் ஹலீம் . ஏ . அசீஸ் மற்றும் வை.எம்.எம்.ஏ யின் குழு உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.

சடடக்கல்லுாாி, மருத்துவக் கல்லுாாி மற்றும் பல துறைகள் சாா்ந்த பல்கலைக்கழகங்களின் மூவினங்களையும் சாா்ந்த 40 மாணவா்கள்  இப் பயிற்சியில்  கலந்து கொள்கின்றனா். நாட்டின் குறிப்பிட்ட துறைகளில் பாண்டியத்தியம் பெற்ற விரிவுரையாளா்கள் விற்பண்னா்கள் பயிற்சிகளை வழங்கி வருகின்றனா். பயிற்சி முடிபு நாளிலான இன்று ஞாயிற்றுக்கிழமை அமேரிக்கத் துாதுவா் கலந்து கொண்டு பயிற்சியாளா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைப்பாா்.