மீன் தொட்டி கொண்டு வருவதாகக்கூறி, சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூரில் இருந்து, நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 15.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான, 316,720 சிகரெட்டுகளை, சுங்கத் திணைக்கள கொள்கலன் சோதனைப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கம்பஹாவிலுள்ள தனியார் நிறுவனத்தின் ஊடாக, இந்த சிகரெட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்

