டெல்லி, உத்தராகண்ட் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் நேற்றிரவு இலேசான நில நடுக்கம்
5.8 ஆக ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன், உத்தராகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்களுக்கோ பொருட்களுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என இந்திய பொலிஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

