சாக்கடையாய் கிடக்கும் சாய்ந்தமருது வைத்தியசாலையின் பின்புறம்




சாய்ந்தமருதின் சுகாதார வைத்திய அதிகாரிகளின் கவனத்துக்கு...............

________________________________________________
சாய்ந்தமருதின் வைத்திய சாலைக்குப் பின்னால் உள்ள தோனா ஆறு பல வருடங்களாக குப்பை கூழங்களினாலும் பழைய மழை நீரினாலும் நிரம்பிக்கானப்படுகின்றது.
இதன் காரனமாக சுற்றியிருக்கின்ற மக்களுக்கு பல நோய்கள் தொற்றும் அபாயம் கானப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் பாடசாலை,வைத்தியசாலை ,கிராமிய தொழில்பயிற்சி நிலையம், நீர்வடிகாலமைப்புச் சபையின் அலுவலகம் போன்றன இயங்கிக் கொன்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இங்கு பாடசாலை மானவர்கள் ,நோயாளிகள் போன்றோர் மிகவும் எளிதான முறையில் பல நோய்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பம் அதிகமாகக் கானப்படுகின்றது. மக்களின் தேவைகளை நிறைவேற்றும் முகமாக இந்த கழிவு நீர் உள்ள தோனாவை சுத்தம் செய்வதற்க்கு நடவடிக்கை எடுக்காமல் பாரமுகமாக இருப்பதையிட்டு நான் கவலையடைகிறேன். 


கடந்த காலங்கலாக டெங்கு ஒழிப்பு வாரம் என பிரகடனப்படுத்தி வீடுவீடாக சாய்ந்தமருது பிரதேச செயலகமும் ஏனைய சமூக அமைப்புகளும் இளைஞர்களும் சென்று சாதித்தது என்ன? அரசியல் நோக்கத்துக்காகவும் தங்களை விளம்பரம் செய்வதற்காகவுமா செயற்பட்டீர்கள் .மாறாக இந்த குப்பைகள் கழிவு நீர் போன்றன தேங்கி யிருக்கின்ற நோய்கள் பரவக் கூடிய இந்த இடம் உங்களின் பார்வைக்கு தோன்றவில்லையா?



ஏன் எமது சமூகத்துக்கு மாத்திரம் இவ்வாறான விடயங்களை கருத்தில் கொள்ளாமல் பாரமுகமாய் இருக்கின்றீர்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொன்டு வர வேண்டும் என்றும் அவ்வாறு தவறும் பட்சத்தில் உயரதிகாரிகளை தாங்கள் தொடர்பு கொள்ள நேரிடும் என்றும் சுகாதார வைத்திய அதிகாரிகளை வேண்டிக் கொள்கின்றேன்.


எனவே அன்புள்ளம் கொன்ட நன்பர்களே சமூக சிந்தனையுடன் இந்தப்பதிவினை ஏனைய நண்பர்களுக்கு கொன்டு செல்வதன் மூலம் எமது சமூகங்களை கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்க முடியும் எனக் கூறி விடை பெறுகின்றன்.

நன்றி .............
அ.மஹ்ஜுன் முஹம்மட்