உலகின் முதலாவது மரப் பெண்



(எம்.ஐ.அப்துல் நஸார்)
பங்களாதேஷை சேர்ந்த பத்து வயதுச் சிறுமிக்கு முகத்தில் மரப்பட்டை போன்ற தோற்பரு ஏற்பட்டுள்ளதையடுத்து உலகின் முதலாவது மரப் பெண்ணாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஷஹானா ஹாதூன் என்ற சிறுமிக்கே முகத்தில் மரப்பட்டை போன்ற தோற்பரு தோன்றியுள்ளது. தோற்பரு உருவாகி பரவுவதை பார்த்து கவலையடைந்த அவரது தந்தை டாக்காவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்தியர்கள் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் உலகில் நான்கு ஆண்களுக்கு மாத்திரமே இது வரை ஏற்பட்டுள்ள மிக அரிதான தோல் நோய் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினர்.
epidermodysplasia verruciformis or Lewandowsky–Lutz dysplasia (எபிடெர்மோடைஸ்பிலஸியா வெர்ரியுசிபோமிஸ் – அல்லது – லெவெண்டௌஸ்கி – லட்ஸ் டைஸ்பிலஸியா) என அழைக்கப்படும் இந்த மரப்பட்டை போன்ற தோற்பரு உருவாகி உடலில் பரவும் அரிதான தோல் நோயினை மிக எளிமையாக ‘மரமனித தோல் நோய் அறிகுறி’ என அழைக்கலாம்.