பிராந்திய முகாமையாளருக்கு நன்றிகள்



Suhaib Umarlebbe

அக்கரைப்பற்று 21 ஆம் பிரிவின் மரைக்கார் வீதியில் ஒரு பகுதியான 220 அடிக்கு நீர்க்குழாய் பொருத்தப்படாத பகுதிக்கு மாத்திரமே அப்பாதையில் கொங்கிறீட் இடப்பட்டுள்ளது.

இது விடயமாக முன்னாள் RM அவர்களிடம் அவற்றைச் செய்து தருமாறு கடந்த 04 வருடங்களுக்கு முன்னர் கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும், அவர் அவற்றை செய்து தருவதாகக் கூறி பின்னர் மறுத்து விட்டார்.

அதனைத் தொடர்ந்து தற்போதய அக்கரைப்பற்று நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளரான Mr.J.Nasrul Careem Manager ( O & M) - RM என்பவர் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியின் பயனாக கொங்கிறீட் பாதையினை வெட்டி, நீர்க்குழாயினை பொருத்தி தந்தார். அதற்காக அவருக்கு எங்களது மகத்தான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.