(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை, மூதூர் கடலில் கடந்த 09ம் திகதி மீன் பிடிக்கச்சென்று காணாமல் போன மீனவரின் ஜனாஸா இன்று (12) காலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட ஜனாஸா மூதூர்-01, பஹ்ரியா நகரைச்சேர்ந்த லத்தீப் பஸ்ரி (29 வயது) எனவும் தெரியவருகின்றது.
கடந்த 09ம் திகதி கடலுக்கு மீன் பிடிக்கச்சென்று காணாமல் போனவரை தேடும் பணியில் கிராம மக்களும் கடற்படையினரும் இணைந்து செயற்பட்டனர்.
ஆனாலும் உயிரிழந்தவரின் ஜனாஸா இன்று (12) காலை மீட்கப்பட்ட நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவரது ஜனாஸா அக்கறைச்சேனை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

