(க.கிஷாந்தன்)
அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் புதிய கட்டட திறப்பு விழா 08.02.2017 அன்று கல்லூரியின் அதிபர் எஸ்.விஜயசிங் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி புதிய கட்டிட தொகுதியை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், மத்திய மாகாண அமைச்சர் ரமேஷ்வரன் ஆகியோர் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தனர்.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் பன்முகப்படுத்தப்பட்ட 75 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு 08.02.2017 அன்று கல்லூரியின் கல்வி நடவடிக்கைக்கு வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
இந்த புதிய கட்டிடத்தில் பனிரெண்டு வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக நான்கு வகுப்பறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், கட்சியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், மத்திய மாகாண அமைச்சர் ரமேஷ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல், கணபதி கனகராஜ், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

