கட்டுகுருந்தை படகோட்டிக்கு விளக்கமறியல்




களுத்துறை – கட்டுகுருந்தை கடற்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளான படகை செலுத்திச் சென்ற படகோட்​டியான இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

குறித்த படகை செலுத்திச் சென்ற பேருவளை, போகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் நேற்று இரவு தெற்கு களுத்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். 

சந்தேகநபர் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் மார்ச் மாதம் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை பேருவளையிலிருந்து களுத்துறைக்கு படகில் சென்று கொண்டிருந்தபோது, அப்படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.