நடிகர் சரத்குமார் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு





சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக தன்னுடைய கட்சியின் சார்பாக, அதன் நிறுவன தலைவரான ஆர். சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் உழைப்பை நேரில் பார்த்திருப்பதாலும், அவரது திறமையிலுள்ள நம்பிக்கையாலும், சமத்துவ மக்கள் கட்சி சகோதரர்களின் வேண்டுகோளின்படி முதல்வர் ஒ. பன்னீர்செல்வத்தின் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எம்ஜிஆரில் தொடங்கி, ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் அதிமுக, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்திருந்தாலும், தற்போது அசாதாரணமான சூழ்நிலையில் சிக்கி இருப்பதை நினைத்து முன்னர் வருத்தம் வெளியிட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.