களுகங்கை கற்பாறைகளுக்குள் சிக்கிய பணியாளர் மீட்பு



மாத்தளை, லக்கல – களுகங்கை திட்டத்தின் அகழ்வுப் பணிகளின்போது சரிந்து வீழ்ந்த கற்பாறைகளுக்குள் 5 மணித்தியாலத்திற்கும் மேலாக அகப்பட்டிருந்த பணியாளர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (26) காலை இந்த சம்பவம் இடம்பெற்ற போது ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்திருந்தார்.
இராணுவ கமாண்டோ படையினரின் ஒத்துழைப்புடன் இந்த பணியாளர் மீட்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் தலைமையிலான இராணுவ குழுவினரின் உதவியில் சிக்குண்டிருந்த பணியாளர் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
30 பேர் கொண்ட இராணுவ கமாண்டோ குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.