ஹிப் ஹொப் ஆதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!



இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியின் பிறந்தநாள் இன்று. இன்டிபெண்டன்ட் இசைக் கலைஞராக தனது இசைப் பயணத்தை துவங்கி சில ஆல்பங்களுக்கு இசையமைத்தவர் விஷால் நடித்த 'ஆம்பள' படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றார். அதைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மணை 2, கதகளி, துருவா, கத்தி சண்டை போன்ற படங்களில் இசையமைப்பாளராக 
தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்திற்கு இசைமைத்துவருகிறார். மேலும் தானே இயக்கி ஹீரோவாக நடித்திருக்கும் மீசையமுறுக்குப் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் கவண் படத்துக்கும் ஆதி தான் இசையமைப்பாளர். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது.