பயிற்சிப் பட்டறை



அனர்த்த முகாமைத்துவ நிலையம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகு மற்றும் ஒக்ஸ்பாம் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த 'அரச அதிகாரிகளுக்கான சமூக மீண்டெழுச்சிக்கான கட்டமைப்பு' தொடர்பான பயிற்சி நிகழ்வு 8ம் 9ம் திகதிகளில் நியூ சன்ரைஸ் தங்ககத்தில் நடைபெற்றது. 

இப்பயிற்சியின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  கிரிதரன், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முன்னாயத்த திட்டமிடல் பணிப்பாளர் J.M.S.ஜயவீர, ஒக்ஸ்பாம் நிறுவன இணைப்பாளர் சிவாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முன்னாயத்த திட்டமிடல் பணிப்பாளர் J.M.S.ஜயவீர, யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி திட்டமிடல்பணிப்பாளர் S.ரவி ஆகியோர் வசதிப்படுத்துனராக கலந்து கொண்டதுடன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகஸ்தர்கள் உட்பட 20 அரச அதிகாரிகள் பயிற்சிகள் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.