மஸ்கெலியவில் கௌரவிப்பு



(க.கிஷாந்தன்)

மஸ்கெலியா பகுதியில் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அவர்களை தயார்படுத்திய ஆசிரியர்களையும், அதிபர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் அண்மையில் மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட 74 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கோட்டம் 3ற்கான கல்வி பணிப்பாளர், மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.