(அப்துல்சலாம் யாசீம்)
மியன்மார் நாட்டைச்சேர்ந்த இரண்டு மீனவர்களில் ஒருவர் திருகோணமலை மீன்பிடி துறைமுகத்துக்கு இன்று (08) இலங்கை மீனவர்களின் படகில் வந்தடைந்துள்ளனர்.
மீன்பிடி படகு பழுதடைந்த நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த இரண்டு மீனவர்களில் ஒருவர் படகொன்றில் திருகோணமலை வந்துள்ளதாகவும் மற்றைய மீனவர் மற்றைய படகில் வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை மீனவர்களினால் காப்பாற்றப்பட்ட மியன்மார் மீனவர்களை துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் மீனவரொருவர் தெரிவித்தார்.

