கண்டி நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த ரயிலில் மோதி, தாயொருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவருடைய மகள் கடுங்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பிலிமத்தலாவ புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் வைத்து, இந்தச் சம்பவம் இன்றுக் காலை இடம்பெற்றுள்ளது. 48 வயதுடைய தாய் இந்தச் சம்பவத்தின் போது உயிரிழந்துள்ளதாகவும் அவருடைய 12 வயதுடைய மகள், கடுகண்ணாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதெனிய வைத்தியசாலைக்கு, மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

