(க.கிஷாந்தன்)
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்களின் எண்ணக்கருவிற்க்கமைவாக நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்து நோக்கில் பாடசாலை மாணவர்கள் மத்தியில்
சிறிய வயது முதல் ஏனைய இனங்களின் கலைகலாசார சமய விழுமிய பண்புகளை ஏற்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட சர்மத பொங்கல் விழா 30.01.2017 அன்று அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தலைமையில் அட்டன் பன்மூர் தமிழ் மகா வித்தியாலத்தில் நடைப்பெற்றது.
சிறிய வயது முதல் ஏனைய இனங்களின் கலைகலாசார சமய விழுமிய பண்புகளை ஏற்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட சர்மத பொங்கல் விழா 30.01.2017 அன்று அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தலைமையில் அட்டன் பன்மூர் தமிழ் மகா வித்தியாலத்தில் நடைப்பெற்றது.
இதன் போது அட்டன் கல்வி வரயத்தில் கோட்டம் ஒன்றில் சுமார் 10 பாடசாலைகளை சேரந்த தமிழ் முஸ்லிம் சிங்கள பாடசாலைகளை சேர்ந்த 500 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் மத்தியில் நல்லிணக்கம் சகவாழ்வு ஏற்படாததன் காரணமாகவே கடந்த காலங்களில் எமக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால் எமது நாட்டில் சுமார் 30 வருட காலம் யுத்தம் ஏற்பட்டது. இந்த யுத்தத்தின் விலைவாக எமது நாட்டில் பெறுமதிமிக்க உயிர்கள் உட்பட பல கோடிக்ககணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
இந்நிலை மீண்டும் தோன்றாமல் இருக்க வேண்டும் என்றால் அனைத்து சமயங்கள் மத்தியிலும் அனைத்து இனங்கள் மத்தியிலும் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். இதற்கு உகந்த இடம் பாடசாலை என்பதால் ஜனாதிபதி செயலகம் இந்த நல்லிணக்க பொங்கல், சித்திரை புத்தாண்டு, வெசாக், மீலாத்விழா, ஒளிவிழா ஆகியன ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இதற்கமையவே இந்த விழா அட்டன் கோட்டம் ஒன்றில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது பொங்கல் விழாவில் இந்து மக்களால் மேற்கொள்ளப்படும் கலாசார அம்சங்கள் மாணவர்களுக்கு நடைமுறையாக செய்து காட்டப்பட்டன.
இதன் போது பாரம்பரிய கலையம்சங்களாக தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நடன நிகழ்வுகளும் இதன் போது இடம்பெற்றன.
கோட்டக்கல்விப்பணிப்பாளர் ரெங்கசாமி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பொங்கல் விழாவுக்கு உதவிகல்விப்பணபிபாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

