நாட்டுக்கும் அதன் முன்னேற்றத்துக்கும் அரிய சேவை ஆற்றியவர்களுக்கு தேசிய கௌரவங்களை வழங்கும் நிகழ்வு திங்களன்று ( 20 ) தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. 12 வருடங்களின் பின்னர் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல துறைகளிலும் தமது பங்களிப்பை நல்கிய 89 பேரை பாராட்டி ஜனாதிபதி தேசிய கௌரவ விருதுகளை வழங்கினார்.

