பங்களாதேஷ் அணிக்கு 457 வெற்றி இலக்கு



இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கட் இழப்பிற்கு 274 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

அதன்படி பங்களாதேஷ் அணிக்கு 457 என்ற வெற்றி இலக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்தப் போட்டியில் உபுல் தரங்க 115 ஓட்டங்களைப் பெற்றதுடன் தினேஷ் சந்திமால் 50 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 

முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது. 

முதலாவது இன்னிங்சில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 494 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களைும் இழந்தது.