சந்தேகநபர் மரணம்: 5 பொலிஸார் பணி இடைநீக்கம்




பேலியகொடை பகுதியில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐந்து பொலிஸாரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி, கடந்த 26ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பணி இடைநீக்கம் வழங்கப்பட்டுள்ளது. 

பேலியகொடை பகுதியில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் அண்மையில் உயிரிழந்தார். 

இது தொடர்பில் கடந்த 26ம் திகதி உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் நான்கு கான்ஸ்டபில்களும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.