அரச வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டள்ளது.
கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன முன்னிலையில் சந்தேகநபரை ஆஜர்படுத்தியதை அடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிணைக் கோரி விமல் வீரவன்சவினால் தாக்கல் செய்யப்பட்ட திருத்தப்பட்ட மனு மீதான விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நாளை (21) பரீசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

