காத்தான்குடியில் டெங்கு காய்ச்சலினால் வெள்ளிக்கிழமை இரவு (17.3.2017) சிறுமியொருவர் உரிழந்துள்ளார்.
புதிய காத்தான்குடி நூறானிய்யா மைய்யவாடி வீதியைச் சேர்ந்த ஜி.பாத்திமா ஹதீஜா (வயது 9) எனும் சிறுமியே டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமையன்று குறித்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் வைத்தயசாலையொன்றில் சிகிச்சை பெற்றும் பயனில்லாததால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்துள்ளனர்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலிருந்து குறித்த சிறுமியை வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.
அங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு (17.3.2017) குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமி டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் இது வரைக்கும்; 36 பேருக்கு டெங்கு என
அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.