இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தத் தவறின் அபாயத்தை அண்மிக்கக்கூடும்



மக்களின் காணிகளை திரும்ப வழங்குவது, நல்லிணக்கத்தை மேம்படுத்துவது, இராணுவ மயமாக்கலைக் குறைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தத் தவறின், அபாயத்தை அண்மிக்கக்கூடும் என சிறுபான்மை மக்கள் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர் ரீட்டா ஐசக் நாடியா தெரிவித்தார்.
ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரிலேயே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.