இலங்கையின் மூத்த பாடலாசிரியரான ஹேமஸ்ரீ டி அல்விஸ்ஸின் மனைவியும் சிரேஸ்ட பாடகியுமான இரினி அல்விஸ் தற்போது ஆதரவற்ற நிலையில் சுகயீனம் காரணமாக படுக்கையிலேயே காலத்தை கழித்து வருகின்றார்.
இரினி அல்விஸ் பிரபலமான பல பாடல்களை பாடி அனைவர் மத்தியிலும் பிரசித்தி பெற்றுள்ளார். இவர் தற்போது தனிமையில் இருப்பதாகவும், உதவி கோருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் பாடகி இரினி அல்விஸிற்கு, பிரபல தொழிலதிபரும் கட்டாரிற்கான இலங்கை தூதுவருமான ஏ.எஸ்.பி.லியனகே நன்கொடையாக ஒரு இலட்சம் ரூபா வழங்கியுள்ளார்.
இதேவேளை, கட்டாரிற்கான இலங்கை தூதுவராக ஏ.எஸ்.பி.லியனகே, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

