கடந்த காலத்தை போன்றே இன்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இருப்பதனால் அவர்களிடமிருந்து இந்நாட்டை பாதுகாக்க வேண்டுமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
இன்று (24) பிற்பகல் இலங்கை துறைமுக அதிகார சபையில் நியமனங்களைப் பெற்றுக் கொண்ட பாதுகாப்பு ஊழியர்களிற்கான நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார். இந்நிகழ்வு மாபொல துறைமுகம் மற்றும் சமுத்திரவியல் கலாசாலையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,
எதிர்கால சந்ததியினர் பொருட்டு நல்லதொரு எதிர்காலத்தை கையளிக்க வேண்டுமாயின் முதலாவதாக தாம் பணியாற்றுகின்ற நிறுவனத்தில் நேர்மையான சேவையினை ஆற்ற வேண்டும் என்றார். இந்நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி உள்ளடங்கிய துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டார்கள்.
´துறைமுகத்தை பாதுகாக்கின்றோம் என கூறும் தொழிற்சங்க தலைவர்களைப் போன்ற திருடர்கள் இத்துறைமுகத்தில் வேறு இல்லை. அதேபோல் துறைமுகத்தின் உள்ளே வருகின்ற ஒரு நல்ல மனிதன் ஓர் ஊழல்வாதியாகவே வெளியேறுகின்றாறென்றே கடந்த காலத்தில் பரவலாக பேசப்பட்டது.
இன்று எம்முடைய நிர்வாகத்தினர் இவ்வனைத்தையும் மாற்றியமைத்துள்ளார்கள். இன்று துறைமுகம் தொடர்பாக மக்கள் மனங்களில் காணப்பட்ட கெட்ட சித்திரம் அழிக்கப்பட்டுள்ளது. நாம் நூறு வீதம் வெற்றிக் கண்டுள்ளோமென கூறமாட்டேன். இன்று துறைமுகத்திலுள்ள திருட்டுச் செயல்களை பெருமளவில் குறைத்துள்ளோம். இதுவே நான் என் வாழ்விலும் ஈட்டிக்கொண்ட விசேட வெற்றியாகும்.
உண்மையில் துறைமுகத்தில் மாத்திரமன்றி நாட்டிலும் அரசாங்கத்திலும் இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இத்திருட்டுச் செயல்களை நிறுத்த வேண்டும். முன்னர் தான் திருடர்கள் இருந்தார்களென நான் கூறமாட்டேன். இன்றும் திருடர்கள் உள்ளார்கள். அன்றிருந்த திருடர்கள் இன்றும் உள்ளார்கள்.
அந்நபர்களுக்கெதிரான நேரடியான நடவடிக்கையை எடுப்பதற்கு தேவையான செயன்முறைகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் எம்மால் ஒரு போதும் இந்நாட்டை திருத்த இயலாது. எம்முடைய பிள்ளைகளிற்கு திருட்டுச் செயல் நிறைந்த நாட்டினையா கையளிக்க போகின்றோம் என நாம் சிந்திக்க வேண்டும்.
இன்று துறைமுகத்தை பாதுகாக்க வேண்டிய பாரிய செயன்முறை எம்மைச் சாரும். இன்று துறைமுகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு துறைமுக அமைச்சை சேர்ந்தவர்களை மட்டும் சார்ந்தில்லை. இந்நாட்டிலுள்ள அனைவரும் துறைமுகத்தை பாதுகாக்க வேண்டும் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.