காத்தான்குடி அரிசி ஆலையின் இயந்திரம் வெடிப்பு



(விஷேட நிருபர்)
காத்தான்குடியில் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை அரிசி ஆலையொன்றின் இயந்திரம் வெடித்ததில் கட்டிடம் உடைந்து சேதமடைந்துள்ளதுடன் வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள அரிசி ஆலையொன்றின் நெல் அவிக்கும் இயந்திரம் வெடித்துள்ளது.
இதனால் அரிசி ஆலையின் கட்டிடங்கள் தளர்ப்பாடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அருகிலிலுள்ள மூன்று வீடுகளிலுள்ள கூரை ஓடுகளும் விழுந்து வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதே போன்று இந்த அரிசி ஆலையின் அருகில் இருக்கும் களஞ்சியசாலைகள் மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளடுன் அதற்குள் பொருட்கள் மற்றும் தளர்பாடங்களும் உடைந்து சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.