பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சட்டங்களை மீறும் வர்த்தகர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மாவட்ட ரீதியில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகார சபையின் தலைவர் ஹஷித திலகரட்ன குறிப்பிட்டுள்ளார்.
தரமற்ற பொருட்களை விநியோகிக்கும் மற்றும் களஞ்சியப்படுத்தும் இடங்களை சுற்றிவளைப்பதற்கான விசேட செயற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

