வேறொரு பிரதமரின் தலைமையிலான ஆட்சிக்கு வாசுதேவ



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குழுவினர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரானவர்கள் இணைந்து, பிரிதொரு பிரதமருடன் ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுப்பின், தனது கட்சி உட்பட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு பெற்றுக் கொடுக்கப்படும் என, பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

தற்போதைய அரசாங்கம் முடிந்த அளவு விரைவாக மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மாற்றப்பட வேண்டும் என்பது அனைத்து கட்டமைப்புக்களும் அல்ல எனக் குறிப்பிட்ட வாசுதேவ, பிரதமர் தலைமையிலான அரசாங்கமே எனவும் கூறியுள்ளார்.