பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை : ஸ்ருதிஹாசன்



நம் நாட்டில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி மற்றும் பிரிட்டன் துணைத் தூதரகம் ஆகியவை இணைந்து
பெண்கள் முன்னேற்றம் குறித்த கருத்தரங்கை நடத்தின. ஐஐடி வளாகத்தில்
நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆண்களுக்கு நிகராக
பெண்கள் நடத்தப்பட்டால் மட்டுமே பெண்களுக்கு எதிரான வன்முறை குறையும் என்று குறிப்பிட்டார்.

நமது நாட்டில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க
 சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பிரிட்டன் துணை தூதரக அதிகாரிகள், ஐஐடி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.