பெரியகல்லாற்றில் பொலிஸ் நடமாடும் சேவை



களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தின் பொதுமக்களுக்கான நடமாடும் சேவை பெரியகல்லாறு விநாயகர் வித்தியாலயத்தில் நடைபெற்றபோது பொதுமக்களிடம் முறைப்பாட்டுப் பிரதிகளை பொறுப்பதிகாரி சனத் நந்தலால். பிரதி பொறுப்பதிகாரி அபூபக்கர் ஆகியோர் உடன் கையளித்து வைத்தனர். 


பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு தொலைந்த கடவுச்சீட்டு, அடையாள அட்டை , சாரதி அனுமதிபத்திரம் சம்பந்தமான முறைப்பாடுகளைப் பதிந்து உடன் முறைப்பாட்டுப் பிரதிகளையும் பெற்றுக் கொண்டனர். கிராம உத்தியோகத்தர் இராதாகிருஷ்ணன், பொலிஸ் உத்தியோகத்தர் ஹேரத் ஆகியோரும் நடமாடும் சேவைக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.