களுவாஞ்சிக்குடி விபத்தில் ஒருவர் பலி




களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ்  அத்தியட்சகர் காரியாலம் அருகே இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில்  முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார்.மேலும் ஒருவர்  படுகாயமடைந்து    வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மோட்டார்சைக்கிளும்  ஆட்டோவும்  மோதி  இவ் விபத்து சம்பவம்  இடம்பெற்றுள்ளது .

இது  தொடர்பான   விசாரணைகளை களுவாஞ்சிகுடி  பொலிசார் மேற்கொண்டு  வருகின்றனர்.