பூசகர் விபத்தில் பலி



.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு-கல்முனை பழைய கல்முனை வீதி, கல்லடியில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில், பூசகர் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பீ.வெதகெதர தெரிவித்தார்.
கல்லடி, பேச்சியம்மன கோயிலில், பூசகராக பணியாற்றிவந்த ஆறுமுகன்  வடிவேல் (வயது 70) என்பவரே, இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கல்முனையிலிருந்து  மட்டக்களப்பு நோக்கிச் சென்ற கே.டி.எச்.ரக வானொன்று, குறித்த நபரை மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- See