மத்தியவங்கி பிணை முறிகள் தொடர்பில் முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனிடம் மூன்றாவது நாளாக இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டது.
தனது சட்டத்தரணிகளுடன் ஆணைக்குழு முன் ஆஜரான முன்னாள் ஆளுநரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்தியவங்கி பிணை முறிகள் விற்பனையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை ஸ்தாபித்தமை குறிப்பிடத்தக்கது.

