இலங்கைக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிவந்த, கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் வசம் சிக்கியுள்ளதாக, நம்பத்தகுந்த தகவல்கள் வௌியாகியுள்ளதாக, ரொய்டர் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
துபாய் அரசுக்கு சொந்தமான எரிஸ் 13 (Aris 13) எனும் இந்த கப்பலில் எட்டுப் பேர் அடங்கிய குழு பயணித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் கப்பல் சோமாலிய கடற்பகுதியை அண்மித்த வேளை, காணாமல் போயுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், இந்தக் கப்பல் கடத்தப்பட்ட தகவல் உண்மையாயின் 2012ம் வருடத்தின் பின்னர், சோமாலிய கடற்கொள்ளையர்களின் கைகளில் சிக்கிய முதல் கப்பல் இதுவாகும் எனவும் ரொய்டர் செய்தி வௌியிட்டுள்ளது.
இதேவேளை, இது பற்றிய சரியான தகவல்களை அறிந்து கொள்ள பிரித்தானிய கேர்ணல் ஒருவர் கடற்கொள்ளையர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
நேற்றைய தினமளவில் இந்தக் கப்பலை இரண்டு சிறிய படகுகள் பின்தொடர்ந்ததாகவும் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்தநிலையில், இந்த தகவலை பதிவு செய்துள்ள வொயிஸ் ஓப் அமெரிக்கா எனும் ஊடகம், குறித்த கப்பல் ஐக்கிய அரபு இராஜ்ஜியக் கொடியை தாங்கியிருந்ததாகவே குறிப்பிட்டுள்ளது.
பின்னிணைப்பு (பிற்பகல் - 03.35)
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பலில் இருந்த எட்டு ஊழியர்களும் இலங்கையர்கள் என நம்புவதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.