பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை, புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹேந்ரவிதாரணவின் கீழ் இயங்கிய விஷேட குழுவினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
மேலும், லசந்தவின் கொலை தவிர்த்து, ஊடகவியலாளர்களான உபாலி தென்னக்கோன், கீத் நொயார் ஆகியோர் மீதான தாக்குதல்களிலும், மேலும் சில ஊடகவியலார்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு துன்புறுத்தல் சம்பவங்களுடனும் இந்தக் குழு தொடர்புபட்டிருப்பதாகவும், அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், மேஜர் ஜெனரல் கபில ஹேந்ரவிதாரணவின் கீழ் இயங்கிய விஷேட குழுவினால் ஐந்து சிம் காட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து அழைப்புக்களுக்கும் இந்த சிம் காட்களே பாவிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தனது வாக்குமூலத்தில் அப்போது, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பொறுப்பாக இருந்தவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பெரேரா எனவும், அவர் உரிய முறையில் கடமைகளுக்கு சமூகமளிக்கவில்லை எனவும் பென்சேகா குறிப்பிட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.