தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் உள்ளடங்கிய 10 பேர் கொண்ட குழு நேற்று இரவு (11.55) இலங்கையை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான SQ -468 எனும் விமானத்தில் இவர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

