இந்த நபரை காணவில்லை



கொழும்பு மாளிகாவத்தையை சேர்ந்த முஹம்மது மும்தாஸ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான முஹம்மது மும்தாஸ், 148/2, ஹதியாவத்தை வீதி, வெலிபிட்டிய, தர்காநகர் என்ற விலாசத்தில் வசிக்கக்கூடியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நபர் காணாமல் போன விடயம் சம்பந்தமாக அளுத்கம பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எனினும் இதுவரை அவர் தொடர்பான எதுவித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

ஆகவே முஹம்மது மும்தாஸ் என்பவர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் இருப்பின், 0770505100 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு, அவரது குடும்பத்தினர் வேண்டிக் கொண்டுள்ளனர்.